கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு, பிளாஸ்மா மூலம் சிகிச்சை தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, தொற்றுக்கு ஆளான மற்றொரு நோயாளியின் உடலின் செலுத்தி சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். ஏற்கனவே டெல்லியில் பிளாஸ்மா முறையில் சிகிச்சை பெற்ற நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாக அம்மாநில மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்த ஏராளமானோர் , பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடங்கியது.