ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு ரமலான் மாத தொடக்க நாளை முன்னிட்டு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய 53 ஆயிரம் பார்சல்கள் அரசு நிர்வாகத்தால் அளிக்கப்பட்டன.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் இன்று தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களுக்கு அரசு நிர்வாகத்தால் இன்று 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, சமையல் எண்ணெய் பாக்கெட், தேயிலை பாக்கெட், மசாலாக்கள் அடங்கிய பார்சல்கள் அளிக்கப்பட்டன.
உதவி கோரி அரசு கால்சென்டர் மையங்களுக்கு மக்களிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகள், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, நேரடியாக வீடுகளில் பார்சல்கள் விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.