டெல்லியில் 92 கொரோனா பாதிப்பு மண்டலங்களே உள்ளதாகவும், ஒட்டுமொத்த டெல்லியும் பாதிக்கப்படவில்லை என்றும் மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் எனச் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின், டெல்லியில் அதிகம் பாதிப்புக்குள்ளான 92 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளதாகவும், ஒட்டுமொத்தப் பகுதிகளும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
6 பேருக்குப் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன் முடிவுகள் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதாகவும் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்தார்.