ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப் பல்கலைக்கழகங்களை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
1918ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலால் இந்தியாவில் ஒருகோடியே 70 லட்சம் பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் நோயைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் பற்றிப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பழைய தொகுப்புகளில் இருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரைகளை மீண்டும் ஆய்வு செய்வது கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் தனிச் செயலர் புருசோத்தம், பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.