டெல்லி ஐ.ஐ.டி (IIT) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பிசிஆர் கொரோனா சோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
மிகவும் குறைவான செலவில் இந்த கிட்டுகளை வணிக ரீதியில் சந்தைப்படுத்த முடியும் என்று டெல்லி ஐஐடி பேராசிரியர் பெருமாள் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இதற்கான ஆய்வு துவக்கப்பட்டு 3 மாதங்களில் கிட் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இப்போது இருக்கும் எல்லா கொரோனா பிசிஆர் கிட்டுகளைவிடவும் இது செலவு குறைவானது என தெரிவித்துள்ள அவர், நாட்டிலேயே ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற கிட்டை உருவாக்கிய முதல் கல்வி ஸ்தாபனம் என்ற பெருமையும் டெல்லி ஐஐடி க்கு கிடைத்துள்ளதாக கூறினார்.