ஊரடங்கால் மூடப்பட்டுள்ள டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பல புதிய கட்டுப்பாட்டு விதிகளுடன் விரைவில் செயல்படத் துவங்கும் என கூறப்படுகிறது.
அனைத்துப்பயணிகள், விமான ஊழியர்கள் கட்டாயம் முகவுறை அணிவதுடன், பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நிற்கும் முறை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் புழங்கும் அனைவருக்கும் கட்டாய உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
விமானங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் அனைத்து விமானங்களிலும் உணவு வழங்கும் முறை ரத்து செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் விமான சேவை ரத்தை, வரும் 3 ஆம் தேதி வரை நீட்டித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.