நாடு முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என கூறி, தங்களது எதிர்ப்பை அரசிடம் பதிவு செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், டெல்லியில் இன்று காணொலி காட்சி மூலம் அமித் ஷாவும், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தனும், மருத்துவர்கள் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அமைப்பினருடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள், மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அரசு வழங்குமென்று உறுதியளித்தனர். ஆதலால் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.