ஹாட்ஸ்பாட் எனப்படும் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மத்திய சுகாதாரக் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் 61 மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோவா கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நகரங்களில் பல பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஹாட் ஸ்பாட் எனப்படும் நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள இருந்த பகுதிகள் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சரவைகளின் கூட்டுக் குழு ஒன்று கூடுதல் செயலாளர் மனோஜ் ஜோஷி தலைமையில் மும்பையின் வொர்லி, கோலிவாடா பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.இங்குதான் சுமார் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் சில குழுக்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஜெய்ப்பூருக்கு வந்துள்ள 5 நபர் கொண்ட மத்தியக் குழுவினர் நான்கு நாட்களுக்குத் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.