மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர் ஊரடங்கின்போது வீணாகப் பொழுதைப் போக்காமல் வீட்டருகே 25 ஆழக் கிணற்றைத் தோண்டியுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் மே 3 வரை 40 நாட்களுக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. வேலை செய்த ஆட்கள் வீட்டில் சும்மா இருக்க முடியாது எனக் கூறுவர்.
அதற்கு எடுத்துக்காட்டாக மகாராஷ்டிரத்தின் வாசிம் மாவட்டத்தில் கார்கேடா என்னும் ஊரில் கஜானன் என்பவரும் அவர் மனைவியும் வீட்டருகில் ஒரு கிணற்றைத் தோண்டியுள்ளனர்.
இயந்திரங்களின்றிக் கடப்பாரை, சம்மட்டி, மண்வெட்டி ஆகிய கருவிகளைக் கொண்டு 21 நாட்களில் 25 அடி ஆழக் கிணறு தோண்டியுள்ளனர்.
தொடக்கத்தில் இதை ஏளனம் செய்தவர்கள் 25 அடி ஆழத்தில் தண்ணீரைக் கண்டதும் தங்களைப் பாராட்டுவதாகக் கஜானன் தெரிவித்துள்ளார்.