புதிய நேரடி அன்னிய முதலீட்டு விதிகள் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்ற சீனாவின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் பலவீனமடைந்துள்ள இந்திய நிறுவனங்களையும், பங்குகளையும் எல்லைக்கு அப்பால் இருக்கும் நாடுகள் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு இனி இந்திய அரசு வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமாற்றம் கடந்த சனி அன்று அறிவிக்கப்பட்டது.
இதை திரும்ப பெறுமாறு சீனா நேற்று கேட்டுக் கொண்டது. இந்த நிலையில், உலக வர்த்தக அமைப்பு விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், அண்டை நாடுகளின் முதலீட்டை மறுக்கவில்லை என்றும் அதற்கான அனுமதியை அளிப்பதில் மட்டுமே சிறிய நடைமுறை மாற்றம் செய்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.