கொரானா தடுப்பூசி, மருந்து மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி செய்ய 16 திட்டங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக மத்திய அரசின் பயோடெக்னாலஜிகல் துறை தெரிவித்திருக்கிறது.
இவற்றில் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் ஆகியன தலா இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு அவை ஆய்வக சோதனைக் கட்டத்தில் உள்ளது. கெடிலா நிறுவனம் சீரமைக்கப்பட்ட டி.என்.ஏ.தொழில்நுட்பத்தையும், ரிவர்ஸ் ஜெனிட்டிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்த 2 தடுப்பூசிகளையும் உருவாக்குகிறது. பாரத் பயோடேக் நிறுவனம் நேசல் புளூ வேக்சின் தொழில்நுட்பத்தில் தடுப்பூசி ஆய்வை நடத்துகிறது. இவை தவிர சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் காசநோய்க்கான தடுப்பூசியை கொரோனாவுக்கு மனிதர்களிடம்சோதித்துப் பார்க்கும் திட்டத்திற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.