கொரோனாவை தடுக்க பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பக்க விளைவுகள் எற்படும் என மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மக்கள் யாரும் தேவை இல்லாமல், இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகள், கொரோனாவை கட்டுப்படுத்தும் என வெளியான செய்தியால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வாங்கி குவித்துள்ளன.
இந்த சூழலில், மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல், ரத்தத்தில் சர்க்கரை குறைவு போன்ற பிரச்சினைகள் உருவாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.