மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தோரில் கொரோனா தொற்று அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்புப் பணியாளர்கள் தாக்கப்படுவதுடன், சமூக விலகியிருத்தல் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் வாகனங்கள் இயல்பாக இயங்குவதை கண்டித்துள்ள உள்துறை அமைச்சகம் இவற்றை எல்லாம் உடனடியாக சரி செய்யுமாறு அந்த மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது. இந்த 4 மாநிலங்களில் கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்க பல அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் 6 குழுக்களையும் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.