2020-21 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பை தொடர்ந்து வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாளை மார்ச் 31 ல் இருந்து ஜூன் 30 ஆக நீட்டித்து ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படும் வரிசலுகைக்கான முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளையும் சேர்த்துக் கொள்ள ஏதுவாக வருமான வரி படிவங்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன.
திருத்தி அமைக்கப்படும் வருமான வரி தாக்கல் படிவங்கள் வரும் மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.