மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை சுட்டிக்காட்டி, அவர்களுக்கான ஓய்வூதியத்தை குறைக்கவும், நிறுத்தவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இதை மறுத்து மத்திய ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (Department of Pensions and Pensioners Welfare) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டமில்லை என்றும், அதேபோல் ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ திட்டமிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.