துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகங்கள் அடங்கிய ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு இந்தியா 55 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைத்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த துவங்கியுள்ளன. அந்த வகையில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்கனவே இந்த மாத்திரைகள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் இளவரசரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக 55 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்று கொண்டிருப்பதாக டெல்லியில் உள்ள அந்த நாட்டின் தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.