மே மாதம் முதல் மாதந்தோறும் 20 லட்சம் கொரோனா சோதனை கிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோய் கண்டறிதல், சிகிச்சை முறை ஆய்வு, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ஆகிய பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருவதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் பத்து லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனை கிட்கள், பத்து லட்சம் விரைவுச் சோதனை கிட்கள் என மொத்தம் 20 லட்சம் கிட்கள் மாதந்தோறும் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு 672 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மொத்தம் 21 ஆயிரத்து 806 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், ஒரு லட்சத்து 73ஆயிரத்து 746 தனிமைப் படுக்கைகளும் உள்ளதாகவும் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.