நாளை முதல் ஊரடங்கின் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ள நிலையில், மாநில அரசுகள் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய விதம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கை செயல்படுத்திய விதம் குறித்த விவரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் உணவு, உறைவிடம் வழங்கியது குறித்த அறிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெறவும் தெரிவிக்கவும் அமைக்கப்பட்டிருக்கும் 24 மணி நேர சேவை மையங்களின் பணி குறித்தும் அமித் ஷா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுப் பெற்றார்.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், இணை அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.