மே 3ம் தேதிக்குப் பிறகு விமானங்களை இயக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 3 ஊரடங்கிற்குப் பிறகு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்குவதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த விமானப் போக்குவர்துத் துறை பொறுப்பு அமைச்சர் ஹர்தீப் எஸ்.பூரி விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதி பெறும் வரை முன்பதிவுகளை செய்ய வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.விமானங்கள் இயக்கப்படுவதற்கான எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை என்றும் ஹர்தீப் எஸ்.பூரி தெளிவுபடுத்தியுள்ளார்.