ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஊரடங்கால் சிக்கித் தவித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள், மாநில அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.
கோட்டாவில் ஐஏஎஸ் உட்பட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், ஊரடங்கால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதோடு, விடுதிகளும் மூடப்பட்டன.
இதனால் கோட்டாவில் சிக்கி தவித்த மாணவர்களை மீட்க ஆக்ரா மற்றும் ஜான்சியிலிருந்து 300 பேருந்துகளை உத்தரபிரதேச அரசு கோட்டா அனுப்பி வைத்தது.
கோட்டாவிலிருந்து மாணவர்களை மீட்டுக் கொண்டு 100 பேருந்துகள் ஜான்சி வந்தடைந்தன. மீட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்