இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் மூன்று புள்ளி மூன்று விழுக்காட்டினரே உயிரிழந்ததாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேசிய நலவாழ்வு அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 45 வயதுக்குட்பட்டவர்கள் 14 புள்ளி நான்கு விழுக்காடு என்றும், 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 10 விழுக்காடு என்றும் தெரிவித்தார்.
60 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் 33 விழுக்காடு என்றும், 75 வயதுக்கு மேற்பட்டோர் 42 விழுக்காடு என்றும் குறிப்பிட்டார்.