ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய தனியார் செல்போன் நிறுவனங்கள் செயல்பாடு நிறைவடைந்த ப்ரிபெய்டு சிம்கார்டுகளின் வேலிடிட்டியை மே 3ம் தேதி வரை மீண்டும் நீட்டித்துள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால், ரீசார்ஜ் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களின் நலனுக்காக முதலில் சிம்கார்டுகளின் வேலிடிட்டியை ஏப்ரல் 17 வரை தனியார் செல்போன் நிறுவனங்கள் நீட்டித்திருந்தன. இந்நிலையில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, மீண்டும் வேலிடிட்டியை நீட்டித்துள்ளன. இதனால் செயல்பாடு முடிந்து அவுட் கோயிங் இல்லாமல் போனாலும் மே 3 வரை இன்கமிங் அழைப்புகளை தொடர்ந்து வாடிக்கையாளர்களால் பெற முடியும்.