மத்தியப் பிரதேசத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் தேவாசில் கொய்லா மொகல்லா என்னுமிடத்தில் தூய்மைப் பணிக்குச் சென்ற துப்புரவுத் தொழிலாளர்களை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. ஒருவன் கோடரியால் வெட்டும்போது தடுத்த தொழிலாளர் தீபக் கையில் வெட்டுக் காயம் அடைந்தார். இதையடுத்துத் தொழிலாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். காயமடைந்த தீபக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோடரியால் வெட்டிய அடில் என்பவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.