சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மின்னொளியால் இந்தியத் தேசியக் கொடி ஒளிரவிடப்பட்டது.
சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் ஆல்ப்ஸ் மலையில் உள்ள மேட்டர்ஹார்ன் மலை உச்சியில் மார்ச் மாத இறுதியில் இருந்து நாள்தோறும் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியும் மின்னொளியால் காட்டப்படுகிறது. ஒளி ஓவிய வல்லுநர் கெரி ஹாப்ஸ்டெட்டர் இந்தப் பணியைச் செய்து வருகிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு நம்பிக்கையும் வலிமையும் தரும் வகையில் நாலாயிரத்து நானூறு மீட்டர் உயரத்தில் இந்தியத் தேசியக் கொடியை அவர் ஒளிரவிட்டுள்ளார். இதற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியும் அந்த புகைப்படத்தை டேக் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கு எதிராக உலகமே போரிட்டு வருவதாகவும், இந்தத் தொற்றுநோயை மனிதநேயம் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.