டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, பிரிட்டனின் நோர்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை 153 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இருசக்கர வாகனங்களையும் 3 சக்கர வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிட்டனின் நோர்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை 153 கோடி ரூபாய் கொடுத்துக் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியதால் உலக அளவில் வளர்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக டிவிஎஸ் இணை மேலாண் இயக்குநர் சுதர்சன் வேணு தெரிவித்துள்ளார். 1898ஆம் ஆண்டு பர்மிங்காமில் நிறுவப்பட்ட நோர்ட்டான் மோட்டார் சைக்கிள்ஸ், டிரையம்ப், பிஎஸ்ஏ, ராயல் என்பீல்டு ஆகிய நிறுவனங்களைப் போலவே இப்போது இந்திய நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.