கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் உரையாடியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ஆப்ரிக்க நாடுகளுடன் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நீண்ட கால நண்பரான தென் ஆப்ரிக்காவின் இந்த முயற்சிக்கு அனைத்து வகையிலும் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது கொரோனாவால் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். அப்போது எகிப்துக்கு மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.