2020-2021 சாகுபடி ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், சாகுபடி ஆண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2020-2021 சாகுபடி ஆண்டில் சம்பா பயிர்கள் விதைப்பு பணி குறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆணையாளர் எஸ்.கே.மல்கோத்ரா அனைத்து மாநில வேளாண்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், சம்பா விதைப்பு பணி சில பகுதிகளில் தொடங்கி விட்டது என்று கூறினார். இந்த பருவத்தில் 15 கோடி டன் உணவு தானியமும், குறுவை பருவத்தில் 14 கோடியே 84 லட்சம் டன் உணவு தானியமும் என மொத்தம் சுமார் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார்.