ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் அனுமதிக்கப்படும் தொழில்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய பட்டியலில் , தேசிய அளவிலான ஊரடங்கின் போது தளர்வு அளிக்கப்படும் துறைகள் குறித்த விவரம் உள்ளது. குறைந்த ஊழியர்களுடன் நகர்ப்புற கட்டுமானத் தொழில்களுக்கு அனுமதி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் இயங்க அனுமதி உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பேக்கேஜிங், மூங்கில் விற்பனை, தேங்காய் விவசாயம், வனப் பொருட்கள் போன்றவற்றுக்கும் இதில் கூடுதலாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த சரக்குகளை தடையின்றி கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதில் அத்தியாவசியப் பொருட்களுடன் இதர சரக்குகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகள், மீன்பிடித்தொழில், உணவுப் பதப்படுத்துதல், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி, நிலக்கரி, தாமிரம் மற்றும் எண்ணெய் உற்பத்திக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.