நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் 20ந் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதும், அவசர உதவிகள் தடையின்றி கிடைக்க, தற்காலிகமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 20ந் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஊரடங்கில் இருந்து தனியார் நிறுவனங்கள், கட்டுமான தொழிற்சார்ந்த பணிகள் போன்றவற்றிற்கு மத்திய அரசு விலக்கு அளித்திருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அவற்றிற்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.