இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
இந்தியாவில் மொத்தம் 730 மாவட்டங்கள் உள்ளன. இதில், 20 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேச பகுதிகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிவப்பு மண்டலப் பகுதிகள் எண்ணிக்கையில் 23 விழுக்காட்டைக் கொண்டிருந்தாலும், மக்கள் தொகையில் 37 விழுக்காட்டையும், நிலப்பரப்பில் 29 விழுக்காட்டையும் கொண்டிருக்கின்றன. அதிக அளவாகத் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
டெல்லியில் 10 மாவட்டங்களும், மகாராஷ்டிரத்தில் 14 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. அரசின் புள்ளிவிவரப்படி 45 கோடியே முப்பது லட்சம் மக்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். மும்பை, மும்பை புறநகர், தானே ஆகிய 3 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் 2 கோடிப் பேர் வாழ்கின்றனர்.