தரவரிசையில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையை புறக்கணிக்க சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 7 ஐ.ஐ.டி.க்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.
ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை டைம்ஸ் உயர் கல்வி அமைப்பு வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் முதல் 200 இடங்களைக் கூட இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பிடிக்கவில்லை. இந்த நிலையில்தான் சென்னை, மும்பை, டெல்லி, கௌஹாத்தி, கான்பூர், ரூர்கி, கோரக்பூர் ஐஐடிக்கள், புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளன.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பட்சத்தில் அடுத்த ஆண்டு தரவரிசை வெளியிடுவதில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.