இந்தியாவுக்குள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு முயன்ற தாலிபான்கள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதையும், அவர்களுக்குப் பதிலாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் குறிப்பிட்ட வேலையைச் செய்வதையும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் பேசும்போது, ஆப்கானிஸ்தானின் நங்கல்ஹார் மாகாணத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் முஹ்மண்ட் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய அவர், பலியானவர்களில் 5 பேர் மட்டுமே தாலிபான்கள் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்குப் பின் தாலிபான்கள் கை தளர்ந்திருப்பதாகக் கூறிய அந்த அதிகாரி, அதனைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.