பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என முப்படைத் தலைமைத் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்ற நரவானே அங்கு வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஒய்.கே.ஜோஷி மற்றும் சினார் பகுதியின் கமாண்டர் லெப்டினென்ட் பி.எஸ். ராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து ராணுவ வீரர்களின் மத்தியில் பேசிய அவர், காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு போராடும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான சவால்களை எல்லா நேரங்களிலும் திறம்பட எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நரவானே விளக்கினார். பின்னர் ராணுவ மருத்துவமனைக்கு சென்று தலைமைத் தளபதி பார்ரைவயிட்டார்.