கொரோனா வைரஸ் விவகாரத்தில் தற்போது பரவலாகப் பேசப்படும் பிளாஸ்மா சிகிச்சை பற்றி விளக்குகிறது இந்தச் சிறப்புச் செய்தித் தொகுப்பு...
ரத்தத்தில் உள்ள எந்த அணுக்களும் இல்லாத திரவமே பிளாஸ்மா என்று அழைக்கப்படுகிறது... இதில் பிளாஸ்மா தெரப்பி, பிளாஸ்மா எக்சேஞ்ச் என இரு வகைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா நோயிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் அந்த வைரசின் நோய் எதிர்ப்பு சக்தியான, "பிளாஸ்மா " திரவம் உருவாகியிருக்கும். அந்த பிளாஸ்மா திரவத்தை எடுத்து, சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்திக் குணமடையச் செய்வது தான் இந்தப் பிளாஸ்மா சிகிச்சை.
டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையைச் சோதித்துப் பார்க்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் அனுமதி பெற்றுள்ளனர். தமிழக அரசும் பிளாஸ்மா சிகிச்சையைச் சோதித்துப் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.