கொரோனா அதிகம் பாதித்து சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 28 நாள்களாக பாதிப்பு இல்லை என்றால்தான் பச்சை மண்டலமாக அறிவிக்க வேண்டுமென மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பகுதிகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 170 மாவட்டங்கள், அதிக பாதிப்பு கொண்ட சிவப்பு மண்டலங்களாகவும், 207 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக மாறக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாமென்று மாநில அரசுகளை மத்திய அரசு கோரியுள்ளது. இதேபோல் நாடு முழுவதுமுள்ள 718 மாவட்டங்களை எது சிவப்பு மண்டலம், எது பச்சை மண்டல பகுதி என்று வரையறை செய்யும்படியும் கேட்டுள்ளது.