கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் நடத்திய ஆலோசனையில், கொரோனா காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்துறையினருக்கு, இரண்டாம் கட்ட நிதி நிவாரணங்களை வழங்குவது குறித்து பிரதமர் சில யோசனைகளை தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா மற்றும் ஊரடங்கால் சிறு குறு தொழில்கள் முதல் விமானப்போக்குவரத்து துறை வரை முடங்கி ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக மாறி உள்ள நிலையில், அது குறித்த விவாதமும் இந்த ஆலோசனையின் போது நடந்ததாக கூறப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என பல ஆய்வுகள் கூறுவதால், எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் நிதி ஆதாரங்களை பெருக்குவது குறித்தும் மோடி சில யோசனைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.