உத்தர பிரதேச மாநிலத்தில் 60 வயது மூதாட்டியை ஒருவன் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பக்கத்து வீட்டின் மாடியிலிருந்து படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஏற்கனவே ஒரு முறை சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடக்கும் மூதாட்டி, உதவி கோரி அழுது கொண்டிருக்க, தொடர்ந்து 2ஆவது முறையும் அந்த நபர் துப்பாக்கியால் சுடுகிறான்.
இந்த சம்பவத்தை படம்பிடித்தவர்கள் உட்பட யாரும் உதவ முன்வராத நிலையில், அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் துப்பாக்கியால் சுட்ட மோனு என்பவனையும், அவனுக்கு அடைக்கலம் அளித்த மற்றொருவனையும் கைது செய்துள்ள போலீசார், கொலையை படம்பிடித்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.