டெல்லியில் பீட்சா (Pizza) டெலிவரி இளைஞருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், அவர் பீசா டெலிவரி செய்த 72 குடும்பங்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளன.
டெல்லியின் தெற்கு பகுதியை சேர்ந்த 19 வயது பீட்சா டெலிவரி இளைஞருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த இளைஞருக்கு கொரோனா உறுதியாகும் முன்பு, மாலவியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களில் 72 குடும்பங்களுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார்.
இதே காலக்கட்டத்தில் அந்த இளைஞருடன் சக டெலிவரி இளைஞர்கள் 20 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்த பயண பின்னணியும் இல்லாத நிலையில் கொரோனா உறுதியாகியிருப்பதால், பீட்சா டெலிவரி செய்கையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா உறுதியான இளைஞர், ஜூமாட்டோ (Zomato) மூலம் கிடைத்த ஆர்டரை பெற்று பீட்சா டெலிவரி செய்தவர் ஆவார்.