தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்வி மற்றும் 6 நிர்வாகிகள் மீது, கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், புதிதாக ஐபிசி 304 பிரிவின் கீழும் குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக, டெல்லி போலீஸின் மக்கள் தொடர்பு அதிகாரி மன்தீப் ரந்தாவா (Mandeep Randhawa) தெரிவித்துள்ளார்.
தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது முன்னர், பிணையில் வெளிவரத் தக்க பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் தொற்று நோய்த்தடுப்பு சட்டம் அமலில் இருந்தபோதும், 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏற்கெனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.