கேரளாவில் கொரோனா வார்டுகளாக சுற்றுலா படகுகளை மாற்றியமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில்வே சார்பில் கொரோனா வார்டுகளாக ரயில் பெட்டிகளை மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில் படகு சுற்றுலாவுக்கு பெயர் போன கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் வீடுகளை போன்று அனைத்து வசதிகளையும் கொண்ட சுற்றுலா படகுகளை கொரோனா தனிவார்டுகளாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரளா சுற்றுலா படகுகள் உரிமையாளர் சங்கத்திடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அப்போது கேரள அரசின் திட்டத்தை அந்த சங்கத்தினர் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக ஆலப்புலா மாவட்ட ஆட்சியர் அஞ்சனா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆயிரத்து 500 சுற்றுலா படகுகள் தனிவார்டுகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.