மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் முன் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் காரணமானவர்கள் என இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக ஆர்வலர் வினய் துபே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்குச் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரி முகநூலில் பதிவிட்டிருந்தார்.
14ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யாவிட்டால் புலம்பெயர் தொழிலாளர்களுடன் நடைபயணத்தைத் தொடங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்துப் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து வினய் துபேயைக் கைது செய்துள்ளனர்.
இதேபோலத் தென்மத்திய ரயில்வேயில் வணிகப் பிரிவு அதிகாரிகளுக்கிடையே ஜன்சாதாரண் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து நடைபெற்ற செய்திப் பரிமாற்றக் கடிதத்தைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காகத் தொலைக்காட்சி செய்தியாளரான ராகுல் குல்கர்ணியை உஸ்மானாபாத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.