நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் சராசரி மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா வேளாண்மையைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். இதனால் பருவமழைப் பொழிவைப் பொறுத்தே விளைச்சல், வேளாண் சார்ந்த துணைத் தொழில்கள், மற்ற துறைகளின் வளர்ச்சி இருக்கும். இந்நிலையில் வரவுள்ள தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், நீண்டகாலச் சராசரி அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகப் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.
சராசரி மழையளவு என்பது 50 ஆண்டுக்காலச் சராசரியில் 96 விழுக்காடு முதல் 104 விழுக்காடு வரையுள்ள அளவைக் குறிக்கும்.