மேற்குவங்கத்தில் ஊரடங்கை முறையாகச் செயல்படுத்தத் தவறினால் துணைராணுவப் படையினரை அழைத்துவர வேண்டியதிருக்கும் என ஆளுநர் ஜக்தீப் தங்கார் எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள் நடைபெறுவதைக் காவல்துறையினர் தடுக்கவில்லை என்றும், நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை அரசியல் தலைவர்கள் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியது.
இது குறித்து மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியது. இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஊரடங்கு விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் ஜக்தீப் தங்கார் தெரிவித்துள்ளார்.
சமூக விலகலைப் பின்பற்றச் செய்யவும், மதம் சார்ந்த கூட்டங்களைத் தடுக்கவும் காவல்துறையும் நிர்வாகமும் தவறினால், துணைராணுவப் படையினரை அழைத்துவர வேண்டியதிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.