மகாராஷ்டிர அமைச்சர் ஜிதேந்திர அவ்காத், தனக்குக் கொரோனா வைரஸ் இல்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்காத்துக்குக் கொரோனா தொற்று உள்ளதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் அவர் தனக்குக் கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சோதனை அறிக்கையைத் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
தான் உடல்தகுதியுடன் இருப்பதாகவும் தெருவில் இறங்கிப் பணியாற்றி வருவதாகவும், சில ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இறங்கிக் களப்பணியாற்ற உள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர அவ்காத் குறிப்பிட்டுள்ளார்.