ஊரடங்குக்கு எதிராக மும்பையில் வரும் 18ம் தேதி பிரமாண்ட போராட்டம் நடத்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து,மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இதேபோல் மும்பையின் குர்லா பகுதியில் 18ம் தேதி பிரமாண்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து, சமூகஇணையதளம் ஒன்றில் வினய் துபே என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி, ஏரோலி (Airoli) பகுதியில் வைத்து அவரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.