டெல்லியில் கொரோனா பரவும் ஹாட் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு முக்கியப் பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இரண்டாவது ஊரடங்கு குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட உடனே துவாரகா பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு நோயாளிகளை கண்டறிய முயன்றனர்.சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக கொண்டு சென்று விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கிருமி நாசினி மருந்து தெளிக்க முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.