தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் மே 3 ம் தேதி வரை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 21 நாட்கள் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக 128 ஆண்டுகளில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதன்முறையா மூடப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தேசிய ஊரடங்கு மே மாதம் 3 ம் தேதி நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திருப்பதி திருமலை தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்தை அப்போது வரை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.