ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள மே மாதம் 3 ஆம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
மே 3 ஆம் தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த தொகை CREDIT SHELL என்ற தனி கணக்கில் இருப்பு வைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஊரடங்கு காலத்திற்குப் பிறகு இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள், பயணச்சீட்டை இறுதி செய்யும் போது தொகையை செலுத்த CREDIT SHELL என்ற கட்டத்தில் கிளிக் செய்ய வேண்டும் எனவும் ஸ்பைஸ்ஜெட் விளக்கம் அளித்துள்ளது.