எச்-1பி விசா காலம் முடிவடைவது தொடர்பான விதிகளை தளர்த்துவது மற்றும் விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுவோர், வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்கவும் அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
உலகளாவிய கொரோனா நோய்த் தொற்றுப் பிரச்னை முடியும் வரையிலும் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள எச்1-பி மற்றும் பிற விசாக்களின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவில் பணியாற்றும் ஏராளமான மென்பொறியாளர்கள் தங்களது வேலை மற்றும் விசா ரத்து போன்றவற்றை நினைத்து அச்சப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.