கொரோனா பரிசோதனைக்கு கடந்த ஜனவரியில் ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்த நிலையில், இன்று 220-க்கும் அதிகமான ஆய்வகங்கள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் அனுபவத்தின்படி, 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, மருத்துவமனைகளில் ஆயிரக் கணக்கில் படுக்கைகள் தேவை என்றும், ஆனால் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன என்றும், 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த மருத்துவ வசதிகள் மேலும் விரிவுடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். கொரோனா தடுப்பில் மற்ற நாடுகளைவிட இந்தியா மிகச்சிறப்பான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உலகின் பாராட்டை பெற்றிருப்பதாகவும் மோடி கூறினார்.